ADDED : பிப் 19, 2024 01:15 AM
அ நிறம் | அளவு
சென்னை:சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில், பயணியரின் வசதி மற்றும் வாகனங்களை சீராக நிறுத்துவதற்கான பணிகள், இரு மாதங்களாக நடந்து வந்தன. இதற்காக, ரயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதி, தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, பொது பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்படுகிறது. சின்னமலை மெட்ரோ ரயில் பயணியர், தங்களின் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
இத்தகவலை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
