தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வியாபாரிகளுக்கு ' சிப் ' பொருத்திய அடையாள அட்டை

வியாபாரிகளுக்கு ' சிப் ' பொருத்திய அடையாள அட்டை

வியாபாரிகளுக்கு ' சிப் ' பொருத்திய அடையாள அட்டை


ADDED : நவ 22, 2024 12:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2024 12:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, நசாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், விற்பனையை ஒழுங்குப்படுத்துதலுக்கு, சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி, நகர விற்பனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நகர விற்பனை குழுவின் கூட்டத்தில், 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குப்படுத்துவதற்காக, 'சிப்' பொருத்திய க்யூ.ஆர்., குறியீடு மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இதற்காக, இன்று முதல், 30ம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமில், ஏற்கனவே வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, மொபைல் போன் கொண்டு வர வேண்டும். போன் எண்ணுக்கு 'ஓடிபி' அனுப்பப்படும்.

அந்த எண், மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்று கொண்டு, புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us