/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிறிஸ்துமஸ் குடில் கல் வீசி உடைப்பு
/
கிறிஸ்துமஸ் குடில் கல் வீசி உடைப்பு
ADDED : டிச 28, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பட்டினப்பாக்கத்தில், சாலையோரம் உள்ள கிறிஸ்துவ குடில் முகப்பு கண்ணாடியை, கல்வீசி தாக்கி உடைத்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டினப்பாக்கம், லாஸரஸ் சாலையில், நடைபாதையில் சிறிய அளவில் கிறிஸ்துவ குடில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் முகப்பு கண்ணாடியை, மர்ம நபர் ஒருவர் கல்வீசி உடைத்துள்ளார்.
இதை பார்த்த அப்பகுதிமக்கள், பட்டினப்பாக்கம் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அந்த மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

