/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதியில் நிறுத்திய பாதாள சாக்கடை பணி வீட்டுக்குள் முடங்கிய சூளைமா நகர் மக்கள்
/
பாதியில் நிறுத்திய பாதாள சாக்கடை பணி வீட்டுக்குள் முடங்கிய சூளைமா நகர் மக்கள்
பாதியில் நிறுத்திய பாதாள சாக்கடை பணி வீட்டுக்குள் முடங்கிய சூளைமா நகர் மக்கள்
பாதியில் நிறுத்திய பாதாள சாக்கடை பணி வீட்டுக்குள் முடங்கிய சூளைமா நகர் மக்கள்
ADDED : ஜூலை 22, 2025 12:43 AM

துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர்., சூளைமா நகரில், பாதாள சாக்கடை திட்ட பணியை பாதியில் நிறுத்தியதால், பகுதி மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டில் பாதாள சாக்கடை திட்ட பணி நடக்கிறது. ஒரு நாள் குறிப்பிட்ட தெருவில் பணியை துவங்கி, அதை முடித்துவிட்டு, அடுத்த தெருவில் பணியை துவங்க வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால், ஒரு தெருவில் அறைகுறையாக பணியை செய்து, அதை பாதியில் நிறுத்திவிட்டு, அடுத்த தெருக்களில் பள்ளம் தோண்டி பணியைத் தொடர்கின்றனர். இதனால், பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, ஓ.எம்.ஆர்., சூளைமா நகர் 14 அடி அகலம் கொண்டது. இங்கு, 30 மீட்டர் இடைவெளியில் இயந்திர நுழைவு வாயில் அமைக்க, 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.
பொதுவாக, பகலில் பள்ளம் தோண்டினால், இயந்திர நுழைவு வாயில் கான்கிரீட் வளையத்தை, இரவில் பள்ளத்தில் இறக்கி சமப்படுத்தி கட்டமைக்கப்படும்.
ஆனால், ஒரு வாரத்திற்கு முன், ஆறு இடங்களில் பள்ளம் தோண்டி, பணியை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதனால், வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
எச்சரிக்கை தடுப்புகளும் வைக்காததால், வயதானோர், குழந்தைகள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. மேலும், குமரன்குடில் நகர், செக்கரட்ரியேட் காலனி, தேவராஜ் அவென்யூ போன்ற பகுதிகளில், பள்ளம் எடுத்த பகுதியை முறையாக சீரமைக்காததால், சகதியாக மாறியுள்ளது.
குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு, பாதாள சாக்கடை பணியை முறையாக செய்ய உத்தரவிட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.