/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகர பஸ் நடத்துநர் மயங்கி விழுந்து பலி
/
மாநகர பஸ் நடத்துநர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஆக 18, 2025 03:14 AM

திருவொற்றியூர்:பணியின்போது நடத்துநர், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருவொற்றியூர், ராஜாகடை எழுத்துக்காரன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 55; பேருந்து நடத்துநர். இவர், நேற்று அதிகாலை உயர் நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் நோக்கி சென்ற, தடம் எண்: '56சி' என்ற பேருந்தில் பணியில் இருந்தார்.
திருவொற்றியூர் பணிமனை அருகே பேருந்து, வந்தபோது நடத்துநர் ரமேஷுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமடைந்தார். ஓட்டுநர் பாண்டியன் அவரை, திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
முதலுதவி சிகிச்சைக்கு பின், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். ரமேஷுக்கு, லதா என்ற மனைவியும், 15 வயதில் மகளும் உள்ளனர்.

