ADDED : ஜன 06, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,உத்திரமேரூர் டவுன், கருணீகரர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 59; மாநகர பேருந்து ஓட்டுனர். தாம்பரம் பணிமனையில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று அதிகாலை, தாம்பரம் ராதா பெட்ரோல் பங்க் அருகே ஜி.எஸ்.டி., சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது, அதிவேகமாக வந்த 'மகேந்திரா சைலோ' கார் மோதியது.
இதில், தலையில் படுகாயமடைந்த ஆனந்தனை, அங்கிருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ஆனந்தன் இறந்தார். குரோம்பேட்டை போலீசார் கார் ஓட்டுனரான, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ், 30, என்பவரை கைது செய்தனர்.