ADDED : அக் 19, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி.,யில் 20க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று மதியம் புறப்பட்ட தடம் எண்: 44 மாநகர பேருந்து, பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுனர் ஸ்ரீதர் ஓட்டினார்.
தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் வழியாக சென்றபோது, எங்கிருந்தோ வந்த பெரிய கல், பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து நொறுக்கியது.
சுதாரித்த ஓட்டுனர், பேருந்தை லாவகமாக நிறுத்தினார். பீதியடைந்த பயணியர் அலறியடித்து ஓடினர்.
இதுகுறித்து ஓட்டுனர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின்படி, ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுவர்கள் இருவர், பாலத்தில் வரும் வாகனத்தின் மீது கல் எறிந்து விளையாடியது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
கல் வீசி உடைக்கப்பட்ட பேருந்து கண்ணாடி.