/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகர பேருந்து சேவை தீயம்பாக்கம் வரை நீட்டிப்பு
/
மாநகர பேருந்து சேவை தீயம்பாக்கம் வரை நீட்டிப்பு
ADDED : செப் 05, 2025 02:20 AM
மணலி :பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, மாநகர பேருந்து சேவை தீயம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பிராட்வேயில் இருந்து மூலக்கடை, மாதவரம் பால்பண்ணை, பெரிய மாத்துார், தீயம்பாக்கம் வரை, தடம் எண் 64 'டி' மாநகர பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
கடந்த 2011ம் ஆண்டிற்கு பின், கொசப்பூருடன் நிறுத்தப்பட்டது. இதனால், காந்தி நகர், தியாகி விஸ்வநாததாஸ் நகர், சென்றம்பாக்கம், பெரியார் நகர் மற்றும் தீயம்பாக்கம் மக்கள் போக்குவரத்து வசதியின்றி தவித்தனர்.
இதுகுறித்து, ஆக., 26, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தடம் எண் 64 'டி' மாநகர பேருந்து, தீயம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை தீயம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட்ட மாநகர பேருந்திற்கு, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து, அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.