/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமான நிலையத்தில் இருந்து விரைவில் மாநகர பஸ்கள் ஓடும்
/
விமான நிலையத்தில் இருந்து விரைவில் மாநகர பஸ்கள் ஓடும்
விமான நிலையத்தில் இருந்து விரைவில் மாநகர பஸ்கள் ஓடும்
விமான நிலையத்தில் இருந்து விரைவில் மாநகர பஸ்கள் ஓடும்
ADDED : ஏப் 19, 2025 12:33 AM
சென்னை, கடந்தாண்டு கனமழையின்போது, விமான நிலையத்தில் இருந்து சென்னையின் பல இடங்களுக்கு செல்ல முடியாமல், பயணியர் சிரமப்பட்டனர்.
அப்போது, மாநகர பேருந்து இயக்கப்பட்டது. இந்த சேவை, பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அதனால், விமான நிலையத்தில் இருந்து, தினமும் பேருந்துகளை இயக்க கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்நிலையில், பேருந்துகள் இயக்கம் குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் கோரிக்கை காரணமாக, விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை; ரேடியல் சாலை, சோழிங்கநல்லுார் வழியாக அக்கரை வரை என, தினமும் 10 மாநகர பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இதற்கான அனுமதியை பெற்று, பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.