/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குவைத் விமானம் ரத்து: பயணியர் அவதி
/
குவைத் விமானம் ரத்து: பயணியர் அவதி
ADDED : மே 27, 2025 01:03 AM
சென்னை, சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1;50 மணிக்கு குவைத் செல்லும் ஜஷீரா ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் 145 பேர் இருந்தனர். விமானம் சரியாக ரன்வேயில் ஒடத்துவங்கிய போது திடிர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதை கண்டறிந்த விமானி உடனடியாக விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தார். விமானம் பறக்காமல் அவசரமாக நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த விமான பொறியாளர் குழு விமானத்துக்குள் ஏறி கோளாறை சரி செய்யும் பணியில் இறங்கினர். காலை 4;30 மணி ஆகியும் கேளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. பயணியர் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல்களில் தங்கவைக்கப்ட்டனர்.
★★★