/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 அடி மலைப்பாம்பு திருத்தணியில் மீட்பு
/
10 அடி மலைப்பாம்பு திருத்தணியில் மீட்பு
ADDED : மார் 20, 2025 12:35 AM
திருத்தணி,
திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கசத்திரம் கிராமத்தில் உள்ள முக்கோட்டி அம்மன் கோவில் அருகே, நேற்று அதிகாலை மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது.
கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் பார்த்து, அதிர்ச்சி அடைந்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, திருத்தணி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோவில் அருகே பதுங்கியிருந்த, 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஒரு மணி நேரம் போராடி, உயிருடன் பிடித்தனர்.
பின், வனத்துறையினர் அனுமதியுடன் கன்னிகாபுரம் காட்டுப்பகுதியில் விட்டனர்.
அப்பகுதிவாசிகள் கூறுகையில், 'எங்கள் கிராம அம்மன் கோவில் அருகே வனப்பகுதி உள்ளதால், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் அடிக்கடி வருவதால் பக்தர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையோரம், தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்' என்றனர்.