/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கம் 'டெண்டர் லீக்' போலீசார் விசாரணை
/
கிளாம்பாக்கம் 'டெண்டர் லீக்' போலீசார் விசாரணை
ADDED : பிப் 22, 2024 12:53 AM
சென்னை, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கரில், 340 கோடி ரூபாயில் பிரமாண்ட பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இதை பராமரிக்கும் பொறுப்பு, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்திற்கும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கும், பேருந்து நிலையத்தை பாராமரிப்பது தொடர்பாக நடந்த அலுவல் ரீதியான 'டெண்டர்' தொடர்பான தகவல்கள், சட்ட விரோதமாக கசியவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பெருநக வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், விசாரணை நடக்கிறது.
சி.எம்.டி.ஏ., மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடந்துள்ளது. டெண்டர் விவகார தகவல்கள் 'இ - மெயில்' வாயிலாக, வெளி நபர்களுக்கு பகிரப்பட்டுள்ளது.
இதற்கான தகவல்கள் திரட்டப்பட்டு, சைபர் கிரைம் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றவாளி விரைவில் சிக்குவர் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.