/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைவிட்டு போன 'லட்டு' கட்சியினரிடையே மோதல்
/
கைவிட்டு போன 'லட்டு' கட்சியினரிடையே மோதல்
ADDED : பிப் 26, 2026 05:41 AM
பெரம்பூர்: கொளத்துார், கம்பர் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ், 54; அ.தி.மு.க., நிர்வாகி. இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா பேரவை இணைச் செயலரான பழனி மற்றும் சரவணன் ஆகியோர், நேற்று முன்தினம் ஜி.கே.எம்., காலனியில் பகுதி மக்களுக்கு லட்டு வழங்கினர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வெங்கடேசன், உடன் வந்த துரைராஜ் லட்டு வாங்கும்போது, கை தவறி கீழே விழுந்தது.
இதனால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், பழனியும், சரவணனும் சேர்ந்து துரைராஜ் மற்றும் அவரது நண்பரை சரமாரியாக தாக்கினர்.
காயமடைந்த துரைராஜ், பெரியார் நகர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கொளத்துார் போலீசார் பழனி, சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

