ADDED : நவ 23, 2024 12:53 AM
அ நிறம் | அளவு
சென்னை,சேப்பாக்கம், வாலாஜா சாலையில் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. இங்கு 'பனரோமா என்டர்பிரைசஸ்' என்ற தனியார் நிறுவனம் வாயிலாக, 55 துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில், 33 மற்றும் 24 வயது உடைய பெண் துாய்மை பணியாளர்கள் நேற்று, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதில், வடபழனியைச் சேர்ந்த, நிறுவன மேலாளர் மணிவண்ணன், 38, தன்னுடன் 'அட்ஜஸ்மென்ட்' செய்ய வேண்டும் என, தொந்தரவு செய்து வருவதாக குறிப்பிட்டு உள்ளனர். புகாரின்படி, திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.
