ADDED : செப் 25, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, இந்திய விமானப்படையின், 92வது நிறுவன தினத்தை முன்னிட்டு, விமானப்படை தின தேசிய சாகச நிகழச்சி, சென்னை மெரினா கடற்கரையில் வரும் அக்., 6ல் நடைபெற உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, டில்லியில் மட்டுமே நடந்து வந்த இந்நிகழ்ச்சி, முதல் முறையாக சென்னையில் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு, பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
அதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கடைகளையும் மாநகராட்சியினர் நேற்று அகற்றினர்.
மேலும் தேவையற்ற மரக்கட்டைகளையும் அகற்றினர்.