ADDED : பிப் 17, 2026 06:28 AM
சென்னை: காலநிலை திட்டமிடல் உள்ளிட்ட பணிகளுக்காக நடப்பு நிதியாண்டில், 1,341.20 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின், 2025 - 26ம் நிதியாண்டின் முதல் காலநிலைக்கான நிதிநிலை அறிக்கையை, மேயர் பிரியா, ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிட்டார். துணை கமிஷனர் பிரதிவிராஜ் பெற்று கொண்டார்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காலநிலை திட்டமிடலுக்கான செலவினம், கண்காணிப்பு, பொறுப்புடைமை ஆகியவை உறுதி செயயப்பட்டு உள்ளது. அதன்படி, 2025 - 26ம் நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்காக, 3,190.61 ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதுவரை, 1,341.2 கோடி ரூபாய் என, 42.4 சதவீதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவை, மழைநீர் வடிகால் கட்டமைப்பு, கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறையில் மீட்டெடுத்தல் ஆகிய பணிகள் செய்யப்பட்டு வ ருகிறது.
பணிகள் குறித்த விபரம், www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இவற்றை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
