ADDED : பிப் 09, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக, தாங்கல் மயானம், 30 நாட்கள் மூடப்பட உள்ளதால், அருகில் உள்ள ஜி.கே.எம்., காலனி மற்றும் நேர்மை நகர் மயானங்களை பயன்படுத்த மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.
திரு.வி.க., நகர் மண்டலம், 67வது வார்டு, தாங்கல் பகுதியில் உள்ள மயானம், பராமரிப்பு பணிகளுக்காக, மார்ச் 30 வரை செயல்படாது.
இதனால், 64வது வார்டில் உள்ள ஜி.கே.எம்., காலனி மற்றும் 66வது வார்டில் உள்ள நேர்மை நகர் மயானங்களை பயன்படுத்த வேண்டும் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
