/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் கோப்பை குத்துச்சண்டை சென்னை, திண்டுக்கல் அபாரம்
/
முதல்வர் கோப்பை குத்துச்சண்டை சென்னை, திண்டுக்கல் அபாரம்
முதல்வர் கோப்பை குத்துச்சண்டை சென்னை, திண்டுக்கல் அபாரம்
முதல்வர் கோப்பை குத்துச்சண்டை சென்னை, திண்டுக்கல் அபாரம்
ADDED : அக் 20, 2024 12:24 AM

சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன.
போட்டியில், பள்ளி, கல்லுாரி, பொது பிரிவு என, ஐந்து பிரிவுகளில், 36 வகையான போட்டிகளில் 11.56 லட்சம் பேர் விளையாடி வருகின்றனர்.
நேரு விளையாட்டு அரங்கில் நடந்த, கல்லுாரி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், திண்டுக்கல் முதலிடத்தையும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்தையும், கோவை மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
மாணவியருக்கான கால்பந்தில், செங்கல்பட்டு, கடலுார் மற்றும் சென்னை அணிகள், முறையே முதல் மூன்று இடங்களை வென்றன. கல்லுாரி மாணவர்களுக்கான குத்துச்சண்டையில், 48 - 51 கிலோ எடையில், சென்னை வீரர் விக்னேஷ்குமார் தங்கமும், கோவை முகேஷ் வெள்ளியும், வேலுார் லிங்கா சேதுபதி மற்றும் திண்டுக்கல் விஷ்வஜித் ஆகிய இருவரும் வெண்கல பதக்கமும் வென்றனர்.
அதேபோல், 54 - 57 கிலோ எடையில், திண்டுக்கல் ஸ்ரீராம் தங்கம், சென்னை கிஷோர் வெள்ளி, திண்டுக்கல் கவியன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் வெண்கலம் வென்றனர்.
அதேபோல், 67 - 71 கிலோ எடையில் சென்னை வீரர் வசந்த்ராஜ் தங்கமும், கோவை பிரஜித் வெள்ளியும், செங்கல்பட்டு கபிலன் மற்றும் மதுரை கவுதம் வெண்கலமும் கைப்பற்றினர்.
மேலும் 60 - 63 கிலோ எடையில், சென்னை தருண் மற்றும் திவாகம் முறையே தங்கமும் வெள்ளியும், கிருஷ்ணகிரி திருவேந்தன், செங்கல்பட்டு பரத் கிருஷ்ணன் ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர்.
கல்லுாரி மாணவியர் 48 - 50 கிலோ எடையில், சென்னை லக்சயா தங்கமும், கோவை சுவேதா வெள்ளியும், சென்னை லத்திகா மற்றும் புதுக்கோட்டை அகல்யா தேவி வெண்கலமும் கைப்பற்றினர்.