/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு திருச்சி, சேலம் அபாரம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு திருச்சி, சேலம் அபாரம்
ADDED : அக் 17, 2024 12:27 AM

சென்னை,
முதல்வர் கோப்பை விளையாட்டில் ஹாக்கி, ஹேண்ட்பால் போட்டியில் திருச்சி, சேலம் மாவட்ட வீரர், வீராங்கனையர் முதலிடங்களை பிடித்து அசத்தினர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடக்கின்றன.
பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது ஆகிய ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில், திருச்சி முதலிடத்தையும், ராமநாதபுரம் இரண்டாம் இடத்தையும், திருநெல்வேலி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
கல்லுாரி மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டியில், திருச்சி முதலிடத்தையும், சேலம் இரண்டாம் இடத்தையும், வேலுார் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.
மாணவியர் பிரிவில் சேலம், காஞ்சிபுரம் மற்றும் சென்னை அணிகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.
நேற்று காலை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த கல்லுாரி மாணவர்களுக்கான பீச் வாலிபால் போட்டியில், மாணவர்கள் பிரிவில் 21 அணிகளும், மாணவியரில் 15 அணிகளும் மோதின.
அதேபோல், பள்ளி பிரிவினருக்கான கபடி போட்டியில், இருபாலரிலும் தலா 36 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.