/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு ஜூடோவில் சென்னைக்கு தங்கம் விளையாட்டு செய்திகள்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு ஜூடோவில் சென்னைக்கு தங்கம் விளையாட்டு செய்திகள்
முதல்வர் கோப்பை விளையாட்டு ஜூடோவில் சென்னைக்கு தங்கம் விளையாட்டு செய்திகள்
முதல்வர் கோப்பை விளையாட்டு ஜூடோவில் சென்னைக்கு தங்கம் விளையாட்டு செய்திகள்
ADDED : அக் 18, 2024 12:21 AM

சென்னை, முதல்வர் கோப்பைக்கான ஜூடோ போட்டியில், கல்லுாரி மாணவியருக்கான, 48 கிலோ எடை பிரிவில், சென்னை மாணவி தங்கம் வென்றார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் சார்பில், மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடக்கின்றன.
பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள் உட்பட மொத்தம் ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இதில், கல்லுாரி மாணவியருக்கான ஜூடோவில், 48 கிலோ எடை பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஹரிணி மற்றும் ஜோதி ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். சென்னையைச் சேர்ந்த ரோசி மற்றும் கோவை செல்வராணி தலா ஒரு வெண்கலம் வென்றனர்.
பள்ளி மாணவியருக்கான வாள்வீச்சு போட்டியில், 'சேபர்' பிரிவில், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெபர்லி தங்கமும், சென்னையைச் சேர்ந்த பிரபா வெள்ளியும், கன்னியாகுமரி தர்ஷி ஷெப்ரின் மற்றும் சென்னை லத்திகா தலா ஒரு வெண்கலம் கைப்பற்றினர்.
கல்லுாரி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி, நேரு விளையாட்டு அரங்கிலும், கல்லுாரி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கிலும் துவங்கின.
செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி பல்கலை மற்றும் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட அனைத்து போட்டிகளும், இன்று நடக்கின்றன.
பதக்க பட்டியலில் சென்னை மாட்டம், 61 தங்கம், 45 வெள்ளி, 51 வெண்கலம் என, மொத்தம் 157 பதக்கங்களுடன் முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து செங்கை, சேலம், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்கள் உள்ளன.