தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சி.எம்.டி.ஏ., - வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி

சி.எம்.டி.ஏ., - வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி

சி.எம்.டி.ஏ., - வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி


ADDED : மே 07, 2025 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 12:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், நகர்ப்புற திட்டமிடல், கட்டுமான பொறியியல், கட்டட வடிவமைப்பு, சமூக பணி போன்ற பல்வேறு பிரிவுகளில், இரண்டு முதல் ஆறு மாதம் வரையிலான தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில், 30 பேர் சேர்க்கப்படுவர்.

பயிற்சியின்போது, மாதம் 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இதில் பங்கேற்க, மே, 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, www.cmdachennai.gov.in என்ற இணையதளத்தை பார்வையிலாம்.

வாழ்விட வாரியம்

தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், கட்டட வடிவமைப்பு, கட்டுமான பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரையிலான, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில், 10 பேர் சேர்க்கப்படுவர். மாத ஊக்கத்தொகயைாக, 8,000 முதல் 15,000 ரூபாய் வரை வழங்கப்படும்.

பங்கேற்க விரும்புவோர், மே, 30க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு www.tnuhdb.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us