/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
15 இடங்களில் நில வகைபாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
/
15 இடங்களில் நில வகைபாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
15 இடங்களில் நில வகைபாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
15 இடங்களில் நில வகைபாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
ADDED : அக் 27, 2024 08:37 PM
சென்னை:சென்னை பெருநகரில் 15 இடங்களில் நில வகைபாடு மாற்றம் குறித்து, பொது மக்களிடம் கருத்து கேட்கும் பணிகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.
சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டம் அடிப்படையில், சர்வே எண் வாரியாக நில வகைபாடு வரையறுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான் கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதில், பல இடங்களில் நிலங்களின் எதார்த்த தன்மைக்கு பொருந்தாத வகையில் நில வகைபாடு இருப்பதாக புகார் கூறப்படுகிறது. நிர்வாக தவறு காரணமாக நில வகைபாடு வேறுபட்டு இருந்தாலும், உரிமையாளர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து தான் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
அந்த வகையில், சென்னை, பெருநகரில், 15 இடங்களில் நில வகைபாடு மாற்ற வேண்டும் என, தனியாரிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், ஏழு இடங்களில் விவசாய நிலங்களை குடியிருப்பு, வணிக பயன்பாட்டிற்கு மாற்ற கோரிக்கை வந்துள்ளது.
குன்றத்துார், பூந்தமல்லி, புழல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நில வகைபாடு மாற்ற கோரிக்கை வந்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களை பொது மக்கள், www.cmdachennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக அறியலாம்.
இது தொடர்பாக பொது மக்கள் தங்கள் கருத்துக்களை, 21 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

