தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சி.எம்.டி.ஏ.,வில் பழகுனர் பயிற்சி சட்ட மாணவர்களுக்கு அழைப்பு

 சி.எம்.டி.ஏ.,வில் பழகுனர் பயிற்சி சட்ட மாணவர்களுக்கு அழைப்பு

 சி.எம்.டி.ஏ.,வில் பழகுனர் பயிற்சி சட்ட மாணவர்களுக்கு அழைப்பு


ADDED : ஏப் 15, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கோடை கால தொழில் பழகுனர் பயிற்சியில் சேர, சட்ட மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.

சி.எம்.டி.ஏ., வழக்குகள், நீதிமன்ற பணிகளை கவனிக்க சட்டப்பிரிவு ஒன்றும், வழக்கறிஞர்கள் குழு ஒன்றும் உள்ளது.

இவற்றில் கோடைகால தொழில் பழகுனர் பயிற்சியில் சேர சட்டக்கல்லுாரி மாணவர்கள், பட்டதாரிகளுக்கு சி.எம்.டி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.

ஆறு மாதம் மற்றும் ஓராண்டு அடிப்படையில் இப்பயிற்சி வழங்கப்படும். இதில் பங்கேற்போருக்கு, 8,000 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பங்களை internships.cmda@gmail. com என்ற இ - மெயில் முகவரிக்கு, மே 10க்குள் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு, http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us