/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பத்துார் பஸ் நிலைய பராமரிப்புக்கு தனியார் ஆட்களை தேடும் சி.எம்.டி.ஏ.,
/
அம்பத்துார் பஸ் நிலைய பராமரிப்புக்கு தனியார் ஆட்களை தேடும் சி.எம்.டி.ஏ.,
அம்பத்துார் பஸ் நிலைய பராமரிப்புக்கு தனியார் ஆட்களை தேடும் சி.எம்.டி.ஏ.,
அம்பத்துார் பஸ் நிலைய பராமரிப்புக்கு தனியார் ஆட்களை தேடும் சி.எம்.டி.ஏ.,
ADDED : நவ 24, 2025 01:53 AM
சென்னை: சென்னை அம்பத்துாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில், பேருந்து நிலையங்களை சி.எம்.டி.ஏ., கட்டி வருகிறது.
இந்த வகையில், 2023 - 24 நிதி ஆண்டில், கவியரசு கண்ணதாசன் நகர், பெரம்பூர் முல்லை நகர், திரு.வி.க., நகர், பெரியார் நகர், அம்பத்துார் ஆகிய பேருந்து நிலையங்கள் புதிதாக கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக தலா, 5 கோடி ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திரு.வி.க., நகர் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அம்பத்துார் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. விரைவில், இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இதையடுத்து, அம்பத்துார் பேருந்து நிலையத்தை ஐந்து ஆண்டுகளுக்கு இயக்குதல், பராமரித்தல் பணியை தனியாரிடம் ஒப்படைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தனியார் பராமரிப்பில் உள்ளது.
குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

