ADDED : அக் 09, 2024 12:10 AM
அ நிறம் | அளவு
குன்றத்துார்: குன்றத்துார் அருகே, மாங்காடு அடுத்த பரணிபுத்துாரில், தனியார் மர அரவை ஆலை இயங்குகிறது. இங்கு உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அனில் பாண்டே, 43, மற்றும் கிண்டியைச் சேர்ந்த குமார், 48, உள்ளிட்ட சிலர் தங்கி பணியாற்றி வந்தனர். குமாரின் மொபைல் போன் சார்ஜரை எடுத்து மறைத்து வைத்து, அனில் பாண்டே கிண்டல் செய்து விளையாடி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த குமார், நேற்று முன்தினம் இரவு துாங்கிக்கொண்டிருந்த அனில் பாண்டேவின் தலையில், இரும்பு ராடால் அடித்து கொலை செய்தார்.
மாங்காடு போலீசார் குமாரை கைது செய்தனர்.
