/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேயர் பெயரில் வசூல்; இருவர் மீண்டும் கைது
/
மேயர் பெயரில் வசூல்; இருவர் மீண்டும் கைது
ADDED : ஆக 25, 2025 05:34 AM

அம்பத்துார்; அம்பத்துார் ஓ.டி பேருந்து நிலையம் அருகே, கணினி பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் ஷேக் முகமது அலி, 40. மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலர்.
கடந்த 21ம் தேதி தொடர்பு கொண்ட திருமுல்லைவாயலைச் சேர்ந்த பிரகாஷ், 40, என்பவர், தான் மாநகராட்சி உதவி கமிஷனராக இருப்பதாகவும், அம்பத்துாரில் மேயர் பிரியா பங்கேற்கம் நிகழ்ச்சியின் செலவுக்கு, 10,000 ரூபாய் தரவேண்டும் எனக் கூறி மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ஷேக் முகமது அலி, பிரகாஷின் கூட்டாளியான பர்னபாஸ், 48, என்பவரிடம், 2,000 ரூபாய் கொடுத்துள்ளார். மேயர் நிகழ்ச்சி நடப்பதாக பிரகாஷ் கூறியது பொய் என தெரிந்தது.
இது குறித்து அம்பத்துார் போலீசில் புகார் அளிக்கப்பட்டதோடு, பிரகாஷ் மற்றும் பர்னபாஸை அம்பத்துார் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில், உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால், மோசடியில் ஈடுபட்ட இருவரும், நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

