sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுவனிடம் அத்துமீறல் கல்லுாரி மாணவர் கைது

/

சிறுவனிடம் அத்துமீறல் கல்லுாரி மாணவர் கைது

சிறுவனிடம் அத்துமீறல் கல்லுாரி மாணவர் கைது

சிறுவனிடம் அத்துமீறல் கல்லுாரி மாணவர் கைது


ADDED : மார் 12, 2024 12:32 AM

Google News

ADDED : மார் 12, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த, 13 வயது சிறுவன், கடந்த 8ம் தேதி இரவு, ஐ.சி.எப்., மைதானத்தில் கால்பந்து பயிற்சி முடித்து வீடு திரும்பியுள்ளார். திருமங்கலம் வழியாக சைக்கிளில் வந்த சிறுவனை, வாலிபர் ஒருவர் வழிமறித்துள்ளார்.

பின், அவரது மொபைல்போனில் இருந்த ஆபாச வீடியோவை காட்டி, சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார்.

சிறுவன் அவரிடமிருந்து தப்பி வீட்டிற்குச் சென்று, இது குறித்து பெற்றோரிடம் கூற, அவர்கள் திருமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.

இதன்படி, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், இதில் தொடர்புள்ள அயனாவரத்தைச் சேர்ந்த அருண்குமார், 21, என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், அருண்குமார், பிரபல தனியார் கல்லுாரியில் பி.டெக்., இரண்டாமாண்டு படித்து வருவது தெரிந்தது. சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதை அவர் ஒப்புக் கொண்டதால், போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us