ADDED : மார் 16, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
தாம்பரம்: தாம்பரம், கிருஷ்ணா நகரை சேர்ந்த தமிம் அன்சாரி மகன் சுஹைல் அகமது, 20. இவர், தாம்பரம் அருகே, பூந்தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், தன்னுடன் பயிலும் மாணவி ஒருவரை, ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும், கணினியில் அதிக நேரம் கேம் விளையாடியதற்காக, பெற்றோர் சுஹைல் அகமதுவை கண்டித்துள்ளனர்.
இதனால், மன உளைச்சலில் இருந்த சுஹைல் அகமது, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
