ADDED : டிச 06, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், அம்பத்துார், கள்ளிக்குப்பம், பசும்பொன் நகர் மூன்றாவது அவென்யூவைச் சேர்ந்தவர் ரேணுகா தேவி, 21; அண்ணா நகர் தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ., பயின்று வந்தார். நடன வகுப்பு முடித்து தன், 'சுசூகி அவெனிஸ்' ஸ்கூட்டியில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
சி.டி.எச்., சாலையில், அம்பத்துாரில் அமைந்துள்ள இணை ஆணையர் அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் வந்த 'ஐச்சர் லாரி', ரேணுகா ஓட்டி சென்ற ஸ்கூட்டி மீது உரசியது. நிலை தடுமாறிய அவர், சாலையில் விழுந்துள்ளார். அப்போது, லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில், ரேணுகா தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்குன்றம் போக்குவரத்து போலீசார், அயப்பாக்கத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் புவனேஷ்வரனை, 22, கைது செய்தனர்.