/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரியில் பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி
/
லாரியில் பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : மார் 16, 2025 12:24 AM
சென்னை :புழல், கன்னடப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கவுதம், 19. அசத் வரதன், 19. நண்பர்களான இருவரும், கொடுங்கையூர் தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு, பி.காம்., படித்தனர். விடுமுறை தினங்களில், திருமண மண்டபங்களில், மேடை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை டூ - வீலரில் இருவரும், சோழவரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். செங்குன்றம், திருவள்ளூர் கூட்டுச் சாலை, எம்.ஜி.ஆர்., சிலை அருகே, பழுதாகி நின்றிருந்த லாரியில், இவர்களது டூ - வீலர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, மருத்துவர் பரிசோதித்தபோது, கவுதம் இறந்தது தெரிய வந்தது. படுகாயங்களுடன் அசத் வரதன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.