/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரியில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
/
ஏரியில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
ADDED : டிச 08, 2024 12:14 AM
ராமாபுரம் வளசரவாக்கம், ஸ்ரீலட்சமி நகரை சேர்ந்தவர், சேனா அஜித், 19. இவர், ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லுாரி நண்பர்கள் யுகன், அஜித் மற்றும் சிலருடன், ராமாபுரம் பாரதி சாலையில் உள்ள ராமாபுரம் ஏரியில் மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது, அஜித் திடீரென நிலை தடுமாறி நீரில் மூழ்கினார். இதையடுத்து, அவரது நண்பர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அசோக் நகர் தீயணைப்பு வீரர்கள், ஏரியில் மூழ்கிய மாணவனை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில் சேனா அஜித் உயிரிழந்தது தெரியவந்தது.
ராமாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.