ADDED : ஏப் 09, 2025 12:18 AM
அ நிறம் | அளவு
குன்றத்துார்,குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த எபிநேசர், 21. இவர், திருவேற்காட்டில் உள்ள தனியார் கலை கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
இந்நிலையில், குன்றத்துார் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் திறந்து விடப்படும், ஐந்து கண் மதகு பகுதியில் தண்ணீர் கசிவு காரணமாக, குட்டை போல் தேங்கியுள்ள நீரில், நண்பர்களுடன் நேற்று குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக எபிநேசர் நீரில் மூழ்கி பலியானார்.
குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
