/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேகத்தடையில் நிலைதடுமாறி விபத்து: கல்லுாரி மாணவர் பலி
/
வேகத்தடையில் நிலைதடுமாறி விபத்து: கல்லுாரி மாணவர் பலி
வேகத்தடையில் நிலைதடுமாறி விபத்து: கல்லுாரி மாணவர் பலி
வேகத்தடையில் நிலைதடுமாறி விபத்து: கல்லுாரி மாணவர் பலி
ADDED : மே 30, 2025 12:09 AM
அடையாறு நெற்குன்றம், சக்தி நகரை சேர்ந்தவர் கிஷன், 18. இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும், 16 வயது நண்பருடன், பைக்கில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரைக்கு வேகமாக சென்று கொண்டிருந்தார்.
மூன்றாவது குறுக்கு தெருவில் சென்றபோது, வேகத்தடை மீது ஏறிய பைக் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிஷன், சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்து வந்த பள்ளி மாணவர், பலத்த காயமடைந்து மயங்கினார்.
இதை பார்த்த அப்பகுதிவாசிகள், பள்ளி மாணவனை மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கிஷன் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.