/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
/
கல்லுாரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஜூலை 25, 2025 12:23 AM

ஆவடி, சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லுாரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டது.
அம்பத்துார் கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ஹேம்நாத், 18; நெற்குன்றத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கள்ளிக்குப்பம் நோக்கி, சென்னை புறவழிச்சாலையின் அணுகு சாலையில், இம்மாதம் 21ம் தேதி மதியம் தன், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக எதிர் திசையில் வேகமாக வந்த, 'டாடா ஏஸ்' லோடு வாகனம் மோதியதில், ஹேம்நாத் துாக்கி வீசப்பட்டார்.
இதில், தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் படுகாயத்துடன், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஹேம்நாத், நேற்று காலை சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.
தகவலறிந்த பெற்றோர், ஹேம்நாத்தின் உடல் உறுப்புகளை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர். இதன் வாயிலாக ஆறு பேருக்கு மறு வாழ்வு கிடைக்கும் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய 'டாடா ஏஸ்' வாகன ஓட்டுநரான, வேலுாரைச் சேர்ந்த கவின், 23, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.