/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தையூர் ஏரி நீரில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
/
தையூர் ஏரி நீரில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
ADDED : செப் 30, 2025 02:39 AM
திருப்போரூர்;திரு ப்போரூர் அருகே, தையூர் ஏரியில் குளித்த மாணவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தி.நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மகன் சந்தோஷ்குமார், 19; ராமாபுரத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் கணிணி அறிவியல் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்.
நேற்று மதியம் 1:30 மணிக்கு, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, திருப்போரூர் அருகே உள்ள தையூர் ஏரியில் குளிக்கச் சென்றார்.
நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால் கரையில் நின்றுள்ளனர். சந்தோஷ்குமார் மட்டும், ஏரியில் குளித்தபோது, நீரில் மூழ்கினார். தகவலறிந்து வந்த காலவாக்கம் தீயணைப்பு வீரர்கள், ஏரியில் மூழ்கிய சந்தோஷ்குமாரை சடலமாக மீட்டனர்.
கேளம்பாக்கம் போலீசார் மாணவரின் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.