தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கடல் அலையில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி

கடல் அலையில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி

கடல் அலையில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி


ADDED : செப் 28, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர், செப். 29–

கடலில் குளித்த போது, அலையில் சிக்கி, கல்லுாரி மாணவர் டேமியன் சுனில், 19, பலியானார்.

திருவொற்றியூர் – சிவசக்தி நகரை சேர்ந்தவர் டேமியன் சுனில், 19, லயோலா கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, நண்பர்கள் ஆறு பேருடன் சேர்ந்து, கே.வி.கே., குப்பம் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது, கடலில் குளித்து விளையாடியனர். திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கி, டேமியன் சுனில், மாயமானார். உடன் சென்ற நண்பர்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவர்கள், மாணவரை தேடினர்.

நள்ளிரவு அவரது உடல் கரை ஒதுங்கியது. திருவொற்றியூர் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

––––––––––––––––––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us