/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி வேன் ஓட்டுனர் சாலை விபத்தில் பலி
/
கல்லுாரி வேன் ஓட்டுனர் சாலை விபத்தில் பலி
ADDED : ஜூன் 10, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,ஆந்திராவைச் சேர்ந்தவர் பவன்குமார், 26. இவர், மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை மதுரவாயலில் இருந்து கோயம்பேடு நோக்கி, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரை அதிவேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பவன்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.