/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி வாலிபால் போட்டி கிண்டி ஐ.ஐ.டி.,யில் துவக்கம்
/
கல்லுாரி வாலிபால் போட்டி கிண்டி ஐ.ஐ.டி.,யில் துவக்கம்
கல்லுாரி வாலிபால் போட்டி கிண்டி ஐ.ஐ.டி.,யில் துவக்கம்
கல்லுாரி வாலிபால் போட்டி கிண்டி ஐ.ஐ.டி.,யில் துவக்கம்
ADDED : ஏப் 08, 2025 11:50 PM
சென்னை, கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., எனும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் சார்பில், 'ஜிம்மி ஜார்ஜ்' என்ற தலைப்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் துவங்கின.
முதல் நாளான நேற்று முன்தினம், இருபாலருக்கான வாலிபால் போட்டிகள் துவங்கின. அதில், ஹிந்துஸ்தான், ஐ.டி.எம்., பனிமலர், செயின்ட் ஜோசப், ஜேப்பியார், வேளாங்கண்ணி, ஐ.ஐ.டி., மெட்ராஸ் உள்ளிட்ட கல்லுார்களில் இருந்து, ஆண்களில் ஐந்து, பெண்களில் நான்கு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆண்களுக்கான போட்டியில், ஜேப்பியார் கல்லுாரி அணி, 25 - 21, 25 - 21 என்ற புள்ளிக்கணக்கில், செயின்ட் ஜோசப் கல்லுரியையும், பனிமலர் கல்லுாரி 25 - 4, 25 - 14 என்ற கணக்கில் ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணியையும் தோற்கடித்தன.
பெண்களில், செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி, 25 - 22, 25 - 18 என்ற புள்ளிக்கணக்கில், அன்னை வேளாங்கண்ணி கல்லுாரியையும், பனிமலர் கல்லுாரி அணி, 25 - 9, 25 - 12 என்ற புள்ளிக்கணக்கில், ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணியையும் வீழ்த்தின.
நேற்று மாலை துவங்கிய கூடைப்பந்து போட்டியில், ஆண்களில் மூன்று அணிகளும், பெண்களில் நான்கு அணிகளும் பங்கேற்றுள்ளன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.