தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓட்டுச்சாவடி மையங்களில் வண்ண குறியீடு வாக்காளர்கள் எளிதில் ஓட்டுப்போட வசதி 

 ஓட்டுச்சாவடி மையங்களில் வண்ண குறியீடு வாக்காளர்கள் எளிதில் ஓட்டுப்போட வசதி 

 ஓட்டுச்சாவடி மையங்களில் வண்ண குறியீடு வாக்காளர்கள் எளிதில் ஓட்டுப்போட வசதி 


ADDED : ஏப் 13, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை மாவட்டத்தில், ஒரே இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் இருக்கும் பகுதிகளில், அடையாளம் காணும் வகையில், வண்ண குறியீடு போடப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 28.93 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 975 இடங்களில், 4,085 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.

வரும் 23ம் தேதி தேர்தல் நடப்பதையொட்டி, ஓட்டுச்சாவடி மையங்களில், நிழற்பந்தல், வாக்காளர்கள் அமர இருக்கைகள் மற்றும் தண்ணீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.

அதேநேரம், ஒரே இடத்தில், 10க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. அங்கு ஓட்டு போட வருவோர், எந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட செல்ல வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும்.

இதற்காக வழிக்காட்ட பணியாளர்கள் இருந்தாலும், ஓட்டு போடும் வரை குழப்பம் இருக்கவே செய்கிறது. இதனால், மாநகராட்சி சார்பில், 10க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் வண்ணக்குறியீடு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

ஓட்டுச்சாவடி மையங்களில், நுழைவு வாயிலில் இருந்து, ஓட்டுப்பதிவு அறை வரை வண்ணக்குறியீடு போடப்படும். ஓட்டு போட வருவோரின், வாக்காளர் தகவல் சீட் அடிப்படையில், அவர்கள் எந்த மையத்திற்கு செல்ல வேண்டும் என, அங்குள்ள பணியாளர்கள், முகவர்கள் தெரியப்படுத்துவர்.

அதன்படி, வாக்காளர்களின் வசதிக்காக, எந்த வண்ணத்தில் உள்ள குறியீட்டில் நீங்கள் சென்றால், உங்களுக்கான மையம் வரும் என்று தெரிவிக்கப்படும். அதன்படி சென்றாலே, மற்ற யாருடைய வழிகாட்டுதலும் தேவைப்படாது. வாக்காளர்களுக்கு குழப்பமின்றி ஓட்டு போட முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us