திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வண்ண மீன்கள் சந்தைபணிகளும் துவக்கம்மேற், தமிழகத்தில், வண்ண மீன்கள் உற்பத்தி அதிகம் / வண்ண மீன்கள் சந்தைபணிகளும் துவக்கம்மேற், தமிழகத்தில், வண்ண மீன்கள் உற்பத்தி அதிகம்
/
சென்னை
வண்ண மீன்கள் சந்தைபணிகளும் துவக்கம்மேற், தமிழகத்தில், வண்ண மீன்கள் உற்பத்தி அதிகம்
ADDED : ஆக 17, 2024 12:22 AM
வண்ண மீன்கள் உற்பத்தி அதிகரிப்பு
மேற்குவங்கத்திற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில், சென்னை கொளத்துார் பகுதியில் வண்ண மீன்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. இங்கு 250 வகையான வண்ண மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. வில்லிவாக்கம்,பாடி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில், உலகத்தரம் வாய்ந்த வண்ண மீன்கள் சந்தை அமைக்கப்படதிட்டமிடப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகரவளர்ச்சி குழுமத்தின் சார்பில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் இடத்தில் 4 ஏக்கர் பரப்பளவில், 53.50 கோடி ரூபாய் செலவில் இது அமைகிறது.இதற்காக தேர்வு செய்த இடத்தை, ஹந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும்கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராகிருஷ்ணன் ஆகியோர் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தனர்.பின், அமைச்சர் அனிதா ராதாகிருஷணன் 'இம்மாத இறுதிக்குள் பணிகள் துவங்கி, 15 மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும். தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களை கொண்ட கட்டடத்தில் 160 கடைகள் மற்றும் பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளன' என்றார்.