/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துார்க்கப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதி மீட்டு ஆழப்படுத்தும் பணி துவக்கம்
/
துார்க்கப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதி மீட்டு ஆழப்படுத்தும் பணி துவக்கம்
துார்க்கப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதி மீட்டு ஆழப்படுத்தும் பணி துவக்கம்
துார்க்கப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதி மீட்டு ஆழப்படுத்தும் பணி துவக்கம்
ADDED : அக் 07, 2024 01:48 AM

வளசரவாக்கம்:வளசரவாக்கத்தில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நீர்ப்பிடிப்பு பகுதி மீட்கப்பட்டு, மீண்டும் ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வளசரவாக்கம், எஸ்.வி.எஸ்., நகரில், வளசரவாக்கம் ஏரி ஒன்று இருந்தது. ஆக்கிரமிப்புகளால் அழிந்த ஏரியின் மிஞ்சிய நீர்ப்பிடிப்பு பகுதியை, எஸ்.வி.எஸ்., நகர் முதலாவது பிரதான சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஆக்கிரமித்தது.
கடந்த மழைக்காலங்களில், அந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் நிரம்பி, எஸ்.வி.எஸ்., நகர் முதலாவது பிரதான சாலை, அம்பேத்கர் சாலை, சாய்ராம் நகர், ஜெய் நகர் உள்ளிட்ட பகுதிகளில், பல நாட்கள் மழைநீர் தேங்குவது வாடிக்கை.
கடந்தாண்டு பெய்த மழையிலும், இந்த நீர்ப்பிடிப்பு பகுதி நிரம்பி வழிந்து, நான்கு நாட்களுக்கு மேல் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியது.
இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பின், வருவாய் துறை 'சர்வே' செய்து, ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை அளிக்கப்பட்டது.
ஆனால், 9 ஆண்டுகள் கடந்தும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தன.
இதையடுத்து, தனியார் நிறுவனம் சார்பில் அப்பகுதியில் மண் கொட்டி துார்த்தனர்.
இந்த நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு குறித்து, கடந்த 2015ம் ஆண்டு முதல், தொடர்ந்து நம் நாளிதழில் செய்தி வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த நீர்ப்பிடிப்பு பகுதியை வருவாய் துறையினர் சர்வே செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை கண்டறிந்தனர். இதையடுத்து, மாநகராட்சி சார்பில், மண் கொட்டி துார்க்கப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதியை மீண்டும் ஆழப்படுத்தும் பணிகள், நேற்று முன்தினம் துவக்கப்பட்டன.
இப்பகுதியை ஆழப்படுத்தி தண்ணீர் தேங்க வழிவகை செய்தால், அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறையும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

