/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டட குறைபாடுகளை பிப்., 28க்குள் சரிசெய்து கொடுக்க ஆணையம் 'கெடு'
/
கட்டட குறைபாடுகளை பிப்., 28க்குள் சரிசெய்து கொடுக்க ஆணையம் 'கெடு'
கட்டட குறைபாடுகளை பிப்., 28க்குள் சரிசெய்து கொடுக்க ஆணையம் 'கெடு'
கட்டட குறைபாடுகளை பிப்., 28க்குள் சரிசெய்து கொடுக்க ஆணையம் 'கெடு'
ADDED : டிச 24, 2025 05:15 AM
சென்னை: குறைபாடுகளுடன் ஒப்படைத்த வீட்டை, பிப்., 28க்குள் சரி செய்து கொடுக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம், தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு 'கெடு' விதித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா, குடப்பாக்கம் பகுதியில், 'விஜய்ராஜா ேஹாம்ஸ்' நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறது. இதில் வீடு வாங்க, ஆர்.சிவகுமார் என்பவர், 2018ல் முன்பதிவு செய்தார்.
இதை தொடர்ந்து, 2019ல் ஒப்பந்தம் மேற்கொண்டார். இதன்படி, அந்நிறுவனம், 2020ல் வீட்டை ஒப்படைத்தது.
ஆனால், ஒப்பந்தத்தில் தெரிவித்ததற்கு மாறாக, அந்த வீட்டில் நீர்க்கசிவு போன்ற பல்வேறு பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து புகார் தெரிவித்தும், குறைபாடுகளை சரி செய்து தரவில்லை என, கூறப்படுகிறது.
இதையடுத்து, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், சிவகுமார் புகார் செய்தார். புகாரை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் கூறிய புகாரின் அடிப்படையில், பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டது. அதில் குறைபாடுகள் இருப்பது உறுதியானது.
எனவே, இந்த குறைபாடுகளை, கட்டுமான நிறுவனம், 2026 பிப்., 28 க்குள் சரி செய்து கொடுக்க வேண்டும். மேலும் வழக்கு செலவாக, மனுதாரருக்கு, 25,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

