/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் சிற்றுண்டி விடுதி கமிஷனர் திறந்து வைத்தார்
/
போலீஸ் சிற்றுண்டி விடுதி கமிஷனர் திறந்து வைத்தார்
ADDED : பிப் 13, 2024 12:48 AM

சென்னை, சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், போலீசாருக்கான சிற்றுண்டி விடுதி இருந்தது. சிறிய இடமாகவும், போதிய வசதியின்றியும் இருந்ததால், அதை நவீனப்படுத்த போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டார்.
அதன்படி, 11 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிற்றுண்டி விடுதி, 'ஏசி' வசதி, புதிய மேஜை, நாற்காலிகளுடன், ஒரே நேரத்தில் 48 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வளாகத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன், புதிதாக சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் பொருட்களை வைப்பதற்கு, ஒரு அறையும் கட்டப்பட்டுள்ளது.
நேற்று இந்த சிற்றுண்டி விடுதியை, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் திறந்து வைத்தார். தொடர்ந்து, உணவுகளையும் சுவைத்துப் பார்த்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், இணை கமிஷனர் கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.