/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீட்கப்பட்ட ரூ.19 கோடி மதிப்பு பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார் கமிஷனர் ரத்தோட்
/
மீட்கப்பட்ட ரூ.19 கோடி மதிப்பு பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார் கமிஷனர் ரத்தோட்
மீட்கப்பட்ட ரூ.19 கோடி மதிப்பு பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார் கமிஷனர் ரத்தோட்
மீட்கப்பட்ட ரூ.19 கோடி மதிப்பு பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார் கமிஷனர் ரத்தோட்
ADDED : பிப் 04, 2024 02:32 AM

சென்னை:ன்னையில், பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 19.21 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், அவற்றின் உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கீழ், 12 காவல் மாவட்டங்கள் உள்ளன. அவற்றில், 2023ம் ஆண்டில் நடந்த குற்றங்களில் ஈடுபட்டோரை, போலீசார் கைது செய்தனர்.
1,109 பேர் கைது
அவர்களிடமிருந்து தங்க நகைகள், பணம், மொபைல் போன்கள், மடிக்கணினிகள், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவற்றை, பறிமுதல் செய்தனர்.
மீட்கப்பட்ட பொருட்கள், அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கினார். நகைகளை திரும்பப் பெற்ற பெண்கள், சென்னை காவல் துறையினரை கண்ணீர் மல்க வெகுவாக பாராட்டினர்.
நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் கூறியதாவது:
கடந்த 2022ஐ விட 2023ல், செயின் மற்றும் மொபைல்போன் பறிப்பு, ஆதாயத்திற்காக கொலை, கொள்ளை மற்றும் திருட்டு ஆகியவை குறைந்து உள்ளன.
மொத்தம் 70 ரவுடிகள், 78 போதைப்பொருள் குற்றவாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்ட 74 பேர் உட்பட, 2,748 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், வீடு உடைத்து திருடிய 335 குற்றவாளிகள், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 450 குற்றவாளிகள் உட்பட, 1,109 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை, 3,582 கிலோ போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் தீவிர பணி நடக்கிறது. 43 லட்சத்து 37 ஆயிரத்து 482 கோடி ரூபாய் மதிப்புள்ள, 894 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ரூ.265 கோடி
கடந்த 2023ம் ஆண்டு விபத்துகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன. அந்த ஆண்டில் மொத்தம், 19.21 கோடி ரூபாய் மதிப்பிலான, 3,337 சவரன் நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருட்கள், 3 கோடியே 60 லட்சத்து 73 ஆயிரத்து 051 கோடி ரொக்கம் மீட்கப்பட்டு உள்ளன.
தவிர, 798 மொபைல் போன்கள், 411 இருசக்கர வாகனங்கள், 28 ஆட்டோக்கள் மற்றும் 15 இலகுரக வாகனங்கள் மீட்கப்பட்டு, அதன் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
மத்திய குற்றப்பிரிவு தொடர்பான, 811 வழக்குகளில் சம்பந்தப்பட்ட, 265 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, கபீல் குமார் சரட்கர், அஸ்ரா கார்க், செந்தில்குமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.