/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளருக்கு கமிஷனர் வெகுமதி
/
சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளருக்கு கமிஷனர் வெகுமதி
ADDED : மே 01, 2025 12:57 AM

சென்னை, மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 26. அவரது மனைவி சுதா, 24. கடந்த, 2021, டிச., 19ம் தேதி, வியாசர்பாடியில் உள்ள மாமியார் வீட்டில் தங்கியிருந்த மனைவியிடம், பாலாஜி தகராறு செய்தார்.
அப்போது, மாமியார் லதாவை லதாவை கத்தியால் குத்தி தப்பிச்சென்றார். மனைவிக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த லதா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எம்.கே.பி.,நகர் போலீசார், பாலாஜியை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி நடந்த விசாரணையில், பாலாஜி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கொலை குற்றத்திற்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம், கொலை முயற்சி குற்றத்திற்கு, 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டன.
சிறப்பாக பணியாற்றி, கொலை குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த ஆய்வாளர் அம்பேத்கரை, போலீஸ் கமிஷனர் அருண் நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

