/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காமன்வெல்த் செஸ்: சென்னை மாணவி வெண்கலம்
/
காமன்வெல்த் செஸ்: சென்னை மாணவி வெண்கலம்
ADDED : நவ 18, 2025 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: காமன்வெல்த் செஸ் போட்டிகள், மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில், 8ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தன.
போட்டியில், இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், இந்தியா சார்பில், தி.நகரைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரின் மகள் அஸ்வினிகா, 15, பங்கேற்றார்.
போட்ஸ்வானாவின் முசோகோபாரா லோனாவை வீழ்த்தி, வெண்கல பதக்கம் வென்றார். இவர், நுங்கம்பாக்கம், பத்ம சேஷாத்ரி பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார்.

