/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு ஒப்படைக்க இழுத்தடித்த நிறுவனம் வட்டியுடன் இழப்பீடு வழங்க உத்தரவு
/
வீடு ஒப்படைக்க இழுத்தடித்த நிறுவனம் வட்டியுடன் இழப்பீடு வழங்க உத்தரவு
வீடு ஒப்படைக்க இழுத்தடித்த நிறுவனம் வட்டியுடன் இழப்பீடு வழங்க உத்தரவு
வீடு ஒப்படைக்க இழுத்தடித்த நிறுவனம் வட்டியுடன் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஜூன் 18, 2025 12:30 AM
சென்னை, மாங்காடு பகுதியில், 'சைபர் சிட்டி மாங்காடு புராஜெக்ட்' என்ற நிறுவனம் சார்பில், 'டிவைன் சிட்டி பேஸ் - 1' என்ற குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் வீடு வாங்க, சுகன்யா பெருமாள், விஷ்ணு சங்கர் ஆகியோர் சேர்ந்து ஒப்பந்தம் செய்தனர்.
இதன் அடிப்படையில், 2019ல் செய்த ஒப்பந்தத்தின்படி, 45.15 லட்ச ரூபாய் செலுத்தினர். கடந்த 2021ல் பணிகளை முடித்து வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் உறுதியளித்து இருந்தது.
ஆனால், குறிப்பிட்ட காலத்தில் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பணம் செலுத்தியவர்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையிட்டனர்.
இது குறித்து விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்காதது உறுதியாகிறது. இதில், 2021 வரை இருந்த கட்டுமான காலத்தை கொரோனா மற்றும் ஊரடங்கு கால சலுகையை பயன்படுத்தி, 2022 மார்ச் 31 வரை நீட்டித்துள்ளனர்.
எனவே, இந்த நீட்டிக்கப்பட்ட நாளில் இருந்து வீடு ஒப்படைக்கப்படும் நாள் வரை, மனுதாரர் ஏற்கனவே, செலுத்திய, 45.15 லட்ச ரூபாய்க்கு ஆண்டுக்கு, 9.30 சதவீதம் என்ற அடிப்படையில், வட்டி தொகையை இழப்பீடாக அளிக்க வேண்டும்.
இத்துடன் வழக்கு செலவுக்காக, 25,000 ரூபாயை கட்டுமான நிறுவனம், மனுதாரருக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.