/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு
/
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு
ADDED : ஜூலை 02, 2025 11:55 PM
சென்னை, பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகளுக்கான நாள் மற்றும் தலைப்புகளை, தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறையின் அறிக்கை:
தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தின் கீழ், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள், 4ம் தேதியான நாளை, சிந்தாதரிப்பேட்டை, கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்க உள்ளது.
இதன்படி, 'ஆட்சிமொழி வரலாற்றில் கீ.ராமலிங்கம், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சி சொல் பணி' ஆகிய தலைப்புகளில் கட்டுரை போட்டிகள் நடக்கின்றன.
அதேபோல், 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர், அறிஞர் அண்ணாதுரை கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளில், பேச்சு போட்டிகள் நடக்கின்றன.
இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு 7,000 ரூபாய், மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
முதல் பரிசு பெறும் மாணவர், மாநிலப் போட்டியில் பங்கேற்க முடியும். மாநில போட்டியில் பங்கேற்று, முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு, வரும் 18ம் தேதி நடக்கும், தமிழ்நாடு நாள் விழாவில், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.