/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காசநோய் விழிப்புணர்வு மேடவாக்கத்தில் போட்டி
/
காசநோய் விழிப்புணர்வு மேடவாக்கத்தில் போட்டி
ADDED : மார் 15, 2024 12:35 AM
மேடவாக்கம், உலக காசநோய் ஒழிப்பு தினத்தை ஒட்டி, மேடவாக்கம் அரசு மருத்துவமனை சார்பில், மாணவர்களிடையே காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, இன்று போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து மருத்துவர் கீதா கூறியதாவது:
மேடவாக்கம் அரசு பள்ளியில், இன்று காலை 10:00 மணிக்கு போட்டிகள் துவங்குகின்றன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியர் அனைவரும் பங்கேற்கலாம்.
'காசநோய் வரும் முறை மற்றும் தடுப்பு முறைகள்' எனும் தலைப்பில், பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் சிறந்த வாசகம் உருவாக்குதல் ஆகிய நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

