/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை ஹாடோஸ் சாலையில் ரூ.1,000 கோடி மனையை வாங்க போட்டி
/
சென்னை ஹாடோஸ் சாலையில் ரூ.1,000 கோடி மனையை வாங்க போட்டி
சென்னை ஹாடோஸ் சாலையில் ரூ.1,000 கோடி மனையை வாங்க போட்டி
சென்னை ஹாடோஸ் சாலையில் ரூ.1,000 கோடி மனையை வாங்க போட்டி
ADDED : ஏப் 22, 2025 12:41 AM
சென்னை, சென்னையைச் சேர்ந்த முன்னணி கட்டுமான நிறுவனங்களான பாஷ்யம் குழுமம் மற்றும் அரிஹந்த் பவுண்டேஷன் ஆகியவை, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குழுமத்துக்கு சொந்தமான, 5.78 ஏக்கர் இடத்தை வாங்கும் முயற்சியில் உள்ளன.
சென்னை, ஹாடோஸ் சாலையில், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குழுமத்துக்குச் சொந்தமான, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலா, 5.78 ஏக்கர் இடம் உள்ளது. அந்த இடத்தில், தற்போது 'குளோபல் சர்வீசஸ் இந்தியா' செயல்பட்டு வருகிறது.
இந்த இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்த நிலையில், அதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்களில் பாஷ்யம் மற்றும் அரிஹந்த் ஆகியவை மட்டுமே தற்போது போட்டியில் உள்ளன. இடத்தை இந்த நிறுவனங்களில் எது வாங்கினாலும், அங்குள்ள கட்டடத்தை இடித்து விட்டு, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளன.
ஹாடோஸ் சாலையில் 2,400 சதுர அடி கொண்ட ஒரு கிரண்டு மனை தற்போது, 8 முதல் 9 கோடி ரூபாய் விலை போவதாகவும், அடுக்குமாடி குடியிருப்பு வீடு, ஒரு சதுர அடி, 25,000 முதல் 30,000 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தெரிகிறது.